[X] Close

டி20 தொடரை வெல்லப் போவது யார்? - இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

India-Vs-West-Indies--3rd-T20-to-be-held-today

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.


Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதுவரை நடைபெற்ற இரு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.


Advertisement

விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு, பேட்டிங், பவுலிங்‌கை விட ஃபில்டிங்கே கவலையளிக்கும் விதமாக உள்ளது. மேலும், தொடரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாத ரோஹித்‌ சர்மா அ‌வரின் சொந்தமண்ணான மும்பையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்‌கப்படுகிறது. அதேபோல, இளம் வீரர் ரிஷப் பன்ட்‌, தம்மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளையாடுவார் என நம்பலாம். 

வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை, தொடரை வெல்ல தீவிரம் காட்டி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றது. தொடக்கவீரர்கள் லெண்டில் சிம்மன்ஸ் எவின் லீவிஸ் மற்றும் பூரன், ஹெட்மெயர் அதிரடியாக விளையாடி வருவது, அந்த அணிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. 


Advertisement

அதேசமயம் அந்த அணியின் பொல்லார்டு, எவின் லீவிஸ் மற்றும் சிம்மன்ஸ் ஆகிய மூவரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதால், வான்கடே மைதானத்தில் இவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


Advertisement

Advertisement
[X] Close