Published : 08,Dec 2019 01:43 AM

ரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...! #TopNews

important-news-today

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு திட்டமிட்டபடி வரும் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

ரசிகர்கள் தம்மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது என ரஜினிகாந்த் பேச்சு. எதிர்மறைக் கருத்துகளை விடுத்து அனைவரும் அன்பை பரப்ப வேண்டும் என்றும் வேண்டுகோள். "தர்பார்" படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில்  நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் இவ்வாறு பேசினார். 

பாலியல் வன்முறை தலைநகரமாக இந்தியா மாறிவிட்டதாக ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் பா.ஜ.க. தொடர்பு இருப்பதால் உன்னாவ் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதாக பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

சில்லறை விற்பனையில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 220 ரூபாயை எட்டியது. பசுமை பண்ணை கடைகளில் கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படும் என அமைச்சர் காமராஜ் என அறிவித்துள்ளார்.

நீதித்துறை நடைமுறைகள் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளன என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் 'பழிக்குப் பழி வாங்கும் வகையிலான நீதி அதன் தன்மையை இழந்துவிடும்' என  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  தன் கவலையை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் பத்திரிகை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

புதுக்கோட்டை‌ மாவட்டம் நெம்மேலிபட்டியைச் சேர்ந்த தமிழக வீராங்கனை அனுராதா, நேபாளத்தில் நடைபெறும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் தங்க பதக்கம் வென்றார்.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்