[X] Close

இதுதான் போட்டோவா? ரவி சாஸ்திரியை கலாய்க்கும் டிவிட்டர்வாசிகள்!

ravi-shastri-uploads-blurred-image-with-akshay-kumar-gets-brutally-trolled

முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரியை டிவிட்டரில் கலாய்த்து தள்ளியுள்ளனர் சமூக வலைத்தளவாசிகள்.


Advertisement

முன்னாள் கிரிக்கெட் வீரரான ரவி சாஸ்திரி தனது பள்ளி தோழரும், பாலிவுட் நடிகருமான அக்ஷ்ய் குமாரை சமீபத்தில் சந்தித்தார். அப்போது இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரவி சாஸ்திரி. அந்த புகைப்படம் மங்கலாக உள்ளது. இது தான் ரவி சாஸ்திரியை சமூக வலைத்தளவாசிகள் தங்கள் இஷ்டத்துக்கு விமர்சிக்க காரணம்.

’சார், புகைப்படத்தின் தரம், உங்கள் கிரிக்கெட் வர்ணனை போன்று உள்ளது என நக்கலடித்துள்ளனர். எந்த போனில் இந்த புகைப்படத்தை எடுத்தீர்கள் என ஒருசிலர் நக்கலாக கேள்வி கேட்க, சிலரோ, உங்களை புகைப்படம் எடுக்கும்போது, புகைப்படக் காரர் போதையில் இருந்தாரா? என கேள்வி எழுப்பியுள்ளனர். புகைப்படத்தை பதிவேற்றும் முன் அதன் தரத்தை பார்க்க மாட்டீர்களா எனவும் கேட்டுள்ளனர். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close