Published : 03,Dec 2019 10:19 AM
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு புதிய ஐ.ஜி நியமனம்

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் புதிய ஐ.ஜி.-யாக காவல்துறையின் நிர்வாக ஐ.ஜி-யாக இருந்த அன்புவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி. ஆக பணியாற்றி வந்த பொன்.மாணிக்கவேலின் பணிக்காலம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இந்த சிறப்பு நியமனத்தின் பதவிக் காலமும் முடிவடைந்தது.
இந்நிலையில் புதிய ஐ.ஜி-யாக காவல்துறையின் நிர்வாக ஐ.ஜி-யாக இருந்த அன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை பொன்.மாணிக்கவேலின் கீழ் செயல்பட்டு வந்த அதிகாரிகள் இனி இவரின் கீழ் செயல்படவுள்ளனர்.