Published : 24,Nov 2019 07:38 AM

2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் தங்கமணி சூசகம்

Minister-thangamani-support-cm-edappadi-palanisami-in-admk-meeting

2021ல் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி கையில் ஒப்படைப்போம் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி, “அதிமுக அரசு ஒரு நாள், 2 நாள் இருக்குமா என நாள் குறித்தவர்களுக்கு விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் வெற்றி பதில் சொல்லிவிட்டது. அதிசயத்தில் வந்துவிட்டார் என சொல்கிறார்கள். தொண்டர்களோடு தொண்டர்களாக இருந்து உழைப்பால் உயர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி.

திடீரென்று முதல்வராக அதிசயத்தில் வந்தவர் என பேசுகிறார்கள். எதிரி ஒரு பக்கம், துரோகி மறு பக்கம் என அனைத்தையும் முறியடித்து வந்தவர் எடப்பாடி பழனிசாமி. 2021 ல் அதிசயம் நடக்கும் - அதிமுக ஆட்சியே தொடரும் என அதிசயம் நடக்கும். 2021ல் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி கையில் ஒப்படைப்போம்” என தெரிவித்தார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் 2021 சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என்பதை அமைச்சர் தங்கமணி சூசகமாக கூறியுள்ளதாக தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்