[X] Close

சசிகலாவை ஓரம்கட்ட அதிமுக விதிகளில் திருத்தமா?

aiadmk-changed-its-rules-to-participate-in-party-election

உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


Advertisement

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்று வருகின்றது. பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதனையடுத்து, உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோரும் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலை ஆகி வருவரவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அப்படி சசிகலா முன் கூட்டியே விடுதலையாகும் பட்சத்தில் அதிமுகவில் அவர் சேர்க்கப்படுவாரா அப்படி சேர்க்கப்பட்டால் கட்சியில் எந்தப் பதவி கொடுக்கப்படும் என்பது உள்ளிட்ட விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இத்தகைய சூழலில் சசிகலாவை கட்சியில் இருந்து ஓரங்கட்டவே அதிமுக விதிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement
[X] Close