[X] Close

தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் முக்கிய அழைப்பு

MK-Stalin-invite-dmk-cadres

திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழாவில் பங்கேற்க அந்த கட்சி தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 


Advertisement

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அழைப்பு மடலில், திமுக எனும் ஆலமரம் பேரறிஞர் அண்ணா காலத்திற்கு பிறகு தழைத்து செழித்து வலிமையுடன் நிலைத்திருக்க கருணாநிதியின் உறுதிமிக்க நிலைப்பாடே காரணம் என ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். நூறாண்டுகள் கடந்த திராவிட இயக்கத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கிக்கொண்டிருக்கும் பெருமை கருணாநிதிக்கு இருப்பதையும் ஸ்டாலின் நினைவுக்கூர்ந்துள்ளார்.

கருணாநிதி எனும் மாபெரும் தலைவரை தவிர்த்து விட்டு எதிர்காலத்தில் எவராலும் தமிழகத்தின் வரலாற்றை எழுதிவிட முடியாது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 3-ஆம் தேதி கருணாநிதியின் பிறந்தநாளையும், அவரது சட்டமன்ற வைர விழாவையும் இந்திய அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும் விழாவாக்கி, பெருமை சேர்க்க திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close