துப்புரவுத் தொழிலாளி ஒருவர் தனது வேலையை, சோர்வே ஏற்படாத வண்ணம் மிக உற்சாகமாக மாற்றிக் கொண்டு பணி செய்து வருகிறார்.
எந்த வேலையையும் சுமையாக கருதாமல் செய்தால் பாதி திருப்தி ஏற்பட்டு விடும். ஆனால் பலர் அப்படி செய்வதில்லை. அலுத்துக் கொண்டே செய்வதால் எந்த வேலையிலும் ஒரு ஒழுங்கு இருப்பதில்லை. ஆனால் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் துப்புரவு பணியாளர் ஒருவர் பாடல்களை பாடியவாறு குப்பைகளை அகற்றி வருவது பலரையும் கவர்ந்துள்ளது.
மகாதேவ் ஜாதவ் என்ற அந்தத் துப்புரவுத் தொழிலாளி, கடந்த 25 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார். தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பாடல்களை பாடியவாறு குப்பைகளை அகற்றி வருவதாக மகாதேவ் தெரிவிக்கிறார். இதற்காகவே இவர் சொந்த கற்பனையில் நெகிழி பயன்பாட்டிற்கு எதிராகவும் சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டும் பாடல்களை எழுதி வீதியில் உரத்தக் குரலில் பாடி வருகிறார். அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள மகாதேவ் ஜாதவ் உடன் இணைந்து பொதுமக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்