Published : 13,Nov 2019 03:23 AM
வீடியோ எடுப்பதை கண்டு ஆக்ரோஷத்தில் பாய்ந்த புலி (வீடியோ)

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், வாகனத்தில் சென்றவர்களை புலி துரத்திய சம்பவத்தின் காட்சி வெளியாகி உள்ளது.
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டிய மசினகுடிக்கு சுற்றுலா சென்றவர்கள், தெப்பக்காடு நோக்கி வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது சாலை ஓரத்தில் உள்ள புல்தரையில் படுத்திருந்த புலி ஒன்று, வாகனத்தை கண்டதும் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தது.
புலியை கண்டதும் ஆர்வத்துடன் வீடியோ எடுக்க முயன்றவர்களை கண்டதும், புலி வேகமாக மேலும் பாய்ந்து வந்தது. சிறிது தூரம் விரட்டிய பின்னர் புலி வனத்துக்குள் சென்றுவிட்டது. இதையடுத்து சாலை ஓரங்களில் உலவும் வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.