4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் 7-ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். முதலாவதாக, பட்ட மேற்படிப்பான எம்.டி., எம்.எஸ், போன்ற படிப்புகளில் சேர அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. இந்த நடைமுறை ஏற்கெனவே அமலில் இருந்த ஒன்றுதான். ஆனால் நீட் தேர்வு அறிமுகமான பிறகு இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. அதனால் பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு நடைமுறையில் இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இரண்டாவதாக மருத்துவர்களின் ஊதிய விவகாரம். தற்போது அரசு மருத்துவர்கள் 20 ஆண்டுகள் பணியை முடித்த பிறகுதான் நான்காம் நிலை மருத்துவ அதிகாரியாக உயர்வுபெற்று, 1.3 லட்ச ரூபாய் சம்பளத்தை எட்ட முடியும். இளநிலை, முதுநிலை, சிறப்புப் படிப்புகளை முடித்து அரசுப் பணியில் சேரவே 30 -32 வயதாகும் நிலையில், இந்த ஊதியத்தைப் பெறும்போது ஐம்பது வயதைத் தொட்டுவிடுகின்றனர். எனவே, நான்காம் நிலை மருத்துவ அதிகாரியாக உயர்த்துவதை மத்திய அரசுப் பணிகளில் இருப்பதைப் போல 13 ஆண்டுகளிலேயே செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மூன்றாவதாக அரசு கல்லூரிகளில் முதுநிலை படிக்கும் மாணவர்களை சரியான பணியிடங்களில் நியமனம் செய்யாமல், தனியார் கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு அரசு பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். எனவே
பட்ட மேற்படிப்பு படித்த மருத்துவர்களுக்கு வெளிப்படையான கலந்தாய்வு மூலம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனக் கோருகின்றனர்.
நான்காவதாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களுக்கான பணியிடங்களை குறைக்கக் கூடாது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 800 பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். எந்த அளவுக்கு நோயாளிகள் வருகிறார்களோ அந்த அளவுக்கு படுக்கைகளையும் மருத்துவர்களையும் அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் கோருகின்றனர்.
இந்த 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் இடத்தை காலியிடமாக அறிவித்து ஆட்சேர்ப்பு நடைபெறும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!