[X] Close

ஆன்லைனில் மீன் விற்பனை: அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

Online-Fish-Sales-in-Chennai

தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள மீன் மற்றும் மீன் உணவுகளை இணையதளம் வாயிலாக விற்பனை செய்யும் இணையதளத்தை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

முதலில் இந்தத் திட்டம் சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னை வாசிகள் www.meengal.com என்ற இணையதளம் வழியாக ஆர்டர் செய்து மீன்களை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 044-24956896 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் மீன் மற்றும் மீன் பொருட்களை ஆர்டர் செய்து வீட்டிலேயே பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களிடம் இருந்து மட்டுமே மீன்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும் அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படமாட்டாது என அவர் கூறினார். இத்திட்டத்திற்காக சென்னையில் 5 நிலையங்கள் திறக்கப்படும் என்றும். குறைந்தபட்சம் 500 ரூபாய்க்கு ஆர்டர் கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close