[X] Close

கட்டுப்பாட்டை மீறினால்...ரஜினி எச்சரிக்கை!

Rajni-about-rasigar-mandram

ரசிகர் மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும் ஒழுக்கத்திற்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்துகொள்பவர்களை அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க தலைமை மன்ற நிர்வாகிக்கு அதிகாரம் அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு இக்கடிதம் மூலம் தெரிவிப்பது யாதெனில், எந்த ஒரு வகையிலும் நமது மன்றத்தின் கட்டிப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மன்றத்தின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க தலைமை மன்ற நிர்வாகி சுதாகருக்கு அதிகாரம் அளிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close