உதயநிதி ஸ்டாலின், ரெஜினா, சூரி, மன்சூர் அலிகான், யோகிபாபு உட்பட பலர் நடித்த படம், ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று நடந்தது.
உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘எனக்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்தப் படம், ’ஒரு கல் ஒரு கண்ணாடி’. அடுத்து ’கதிர்வேலன் காதல்’ டீசண்டான வெற்றியை கொடுத்தது. அதற்கடுத்து நான் பண்ணின படங்கள் எதிர்பார்த்த அளவு போகலைன்னாலும் தப்பான படங்கள் பண்ணலைன்னு தெளிவா இருந்தேன். அதுக்கு அடுத்து கமர்சியலா, பி அண்ட் சி வரை ரீச் ஆகுற அளவுக்கு இந்தப் படத்தைக் கொடுத்த எழில் சாருக்கு நன்றி’ என்றார்.
சூரி பேசும்போது, ‘இந்தப் படத்தில் இடம்பெற்ற பாட்டு, ’எம்புட்டு இருக்குது ஆசை..’ 20 லட்சத்தை தாண்டி போயிருக்குன்னு சொன்னாங்க. இந்தப் பாடலை ரெஜினாவுக்காக யுகபாரதியும் இமான் அண்ணனும் உருவாக்குன மாதிரி இருக்கு. ரெஜினாவுக்காகவே 20 லட்சம் பேர் இந்தப் பாட்டை பார்த்திருக்கிறதா சொல்றாங்க. இன்னும் பல லட்சத்தை தாண்டும் போல தெரியுது. இமான் அண்ணே இது போல நிறைய பாடல்களை கொடுக்கணும்னே’ என்றார்.
இயக்குனர் எழில், ரெஜினா, யோகிபாபு, சாம்ஸ், டி.இமான், ஒளிப்பதிவாளர் கே.ஜி.வெங்கடேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்