Published : 25,Oct 2019 08:28 AM
ஆர்வக் கோளாறால் விஜய் ரசிகர்கள் ரகளை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் ஆர்வக் கோளாறால் ரகளையில் ஈடுபட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
பிகில் படத்தின் சிறப்புக் காட்சி ஒளிபரப்பவில்லை என விஜய் ரசிகர்கள் நள்ளிரவில் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்த கேள்விக்கு சென்னை விமான நிலையத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “விஜய், அஜித், ரஜினி என எந்த நடிகரின் ரசிகர்களாக இருந்தாலும் ஆர்வக் கோளாறில் இப்படி செய்கிறார்கள்.
நிபந்தனையை ஏற்றதால்தான் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரப்பட்டது. முதல்வரின் ஆலோசனையின் பேரில் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது” எனக் கூறினார்.