மகாராஷ்டிராவில் திரைத்துறை பிரபலங்கள் உற்சாகத்துடன் வாக்களித்தனர். பாலிவுட் நடிகர் அமிர்கான் மும்பையின் பாந்த்ரா மேற்கு தொகுதியில் வாக்களித்தார். குடிமக்கள் அனைவரும் அவசியம் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி தனது மனைவியும் நடிகையுமான லாரா தத்தாவுடன் பாந்த்ரா மேற்குத் தொகுதியில் வாக்களித்தார். இதே தொகுதியில் நடிகை மாதுரி தீக்ஷித், அனைவருடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.
முன்னதாக சாஹோ பட நாயகி ஸ்ரத்தா கபூரின் உறவினரும் 80-களில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்த பத்மினி கோலாபுரி அந்தேரி மேற்குத் தொகுதியில் வாக்களித்தார். உத்தரப்பிரதேசம் கோரப்பூரின் எம்பியும் நடிகருமான ரவி கிஷன், கோரேகான் தொகுதியில் வாக்களித்தார்.
மேலும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் அவரது மனைவி காஞ்சனா நாக்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களித்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியா சூலே பாராமதி தொகுதியில் வாக்களித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கோன்டியா தொகுதி வேட்பாளருமான பிரஃபுல் படேல் தனது மனைவி வர்ஷாவுடன் ஜனநாயக கடமையாற்றினார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!