[X] Close

யுனிவர்சிட்டியில் கல்யாணம்: இது சீன ஸ்டைல்!

Marriage-in-University

சீனாவில் பழமைவாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான நாஞ்ஜிங் பல்கலைக்கழகம் தனது 115-வது ஆண்டு விழாவை முன்னிட்டி 115-ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து அசத்தியுள்ளது.


Advertisement

நாஞ்ஜிங் பல்கலைகழகம் 115-வது ஆண்டு விழாவை நேற்று கொண்டாடியது. இதில் அந்த கல்லூரி ஊழியர்கள், மாணவர்கள் உட்பட 115 ஜோடிகளுக்கு திருமணம் செய்து அசர வைத்துள்ளது கல்லூரி நிர்வாகம். இதில் 57 பழைய மாணவர்கள் ஜோடி, 6 பள்ளி ஊழியர்கள் ஜோடி மற்றும் 52 தற்போது படிக்கும் மாணவர்கள் ஜோடி என 115 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. கல்லூரியிலேயே திருமணம் நடத்தியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டின் தகவல்படி இந்தப் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 32,999 பேர் படிப்பதாகவும் அதில் 13,583 மாணவர்கள் இளநிலை பட்டதாரிகள், 10,865 முதுகலை பட்டதாரிகள், 5,335 மருத்துவ மாணவர்கள், 3,216 வெளிநாட்டு மாணவர்கள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close