[X] Close

ரசிகர்களுக்கு விஜய் கூறிய அட்வைஸ்! - ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஸ்டேக்

Actor-vijay-fans-trending-hastag-about-Keezhadi-in-twitter

ட்விட்டரில் ‘KEEZHADIதமிழ்CIVILIZATION’ என்ற ஹேஸ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர். 

கடந்த வாரம் நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், “சமூக வலைத்தளங்களில் தேவையில்லாமல் சண்டையிட்டு ஹேஸ்டேக் டிரண்ட் செய்வதற்கு பதிலாக சமூகம் சார்ந்த நல்ல விஷயங்களுக்கு ஹேஸ்டேக்கை பயன்படுத்துங்கள்” என ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.

இதற்கு அடுத்த நாளே ட்விட்டரில் ‘JusticeForSubashree’ என்ற ஹேஸ்டேக் டிரண்டானது. அதிலும் விஜய் ரசிகர்கள் தங்களது ஆதரவு கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.


Advertisement

இந்நிலையில் பிகில் பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பானது. இதைத்தொடர்ந்து ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் ‘KEEZHADIதமிழ்CIVILIZATION’ என்ற ஹேஸ்டேக்கை டிரண்ட் செய்து வருகின்றனர். இதில் கீழடி குறித்தும் அங்கு நடைபெறும் தொல்லியல் துறை ஆராய்ச்சி குறித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement
[X] Close