’காவி அணிந்தவர்கள் எல்லோரும் தங்களை துறவி என்று இப்போது அழைத்துக்கொள்கிறார்கள், இது மாற்றப்பட வேண்டும்’ என்று சங்கராச்சார்யா அறக்கட்டளையின் சுவாமி ஆனந்த் ஸ்வரூப் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் ஆஸ்ராம் பாபு, பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இவரை அடுத்து, மத்திய முன்னாள் அமைச்சரும் பாஜக தலைவருமான, சுவாமி சின்மயானந்தா மீது, சட்ட மாணவி ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சங்கராச்சார்யா அறக்கட்டளையின் சுவாமி ஆனந்த் ஸ்வரூப் அளித்த பேட்டி ஒன்றில், ’இவர்களால் மதமும் ஆன்மிகமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
(சின்மயானந்தா)
அவர் மேலும் கூறும்போது, ‘மதம் இன்று வியாபாரம் ஆகிவிட்டது. பணத்தை குறிக்கோளாக கொண்டு இவர்களை போன்றவர்கள் செயல்படுகிறார்கள். முன்பு, நான்கு மறைகளையும் 18 புராணங்களையும் சாஸ்திரங்களையும் கற்றவர்கள் மட்டுமே
துறவியாக முடியும். இப்போது இந்த பாரம்பரிய நடைமுறை குறைந்துவருகிறது. காவி உடை அணிந்த யார் வேண்டுமா னாலும் துறவி, சாமியார் ஆகிவிடுகிறார்கள். ஆஷ்ரம் பாபு, சின்மயானந்தா மீது வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள், ஆன்மிகத்துக்கும் மதத்துக்கும் விழுந்த அடி. இவர்களை போல தங்களைத் தாங்களே சாமியார்கள் என்று கூறிகொள்பவர்களை மக்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்’ என்றார்.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide