சைக்கிளில் சென்ற பள்ளி மாணவரிடம், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஹெல்மெட் கேட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் சாலை போக்குவரத்து விதிகளை நெறிப்படுத்துவதில், காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் ஏரியூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை பாய்ந்து பிடித்த காவலர்கள், அவர்களின் வாகன ஆவணங்களை சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது பள்ளி மாணவர் ஒருவர் அந்த சாலை வழியாக சைக்கிளில் சென்று சென்று கொண்டிருந்தார். சினிமா ஹீரோ போல் சாலையின் குறுக்கே பாய்ந்த உதவி ஆய்வாளர், மாணவரின் சைக்கிளை தடுத்து நிறுத்தினார். பைக்குகளின் சாவியைப் பிடுங்குவதைப் போல், சிறுவன் வைத்திருந்த இலவச சைக்கிளுக்கு பூட்டுபோட்ட அவர், அதை அப்படியே தூக்கி ஓரங்கட்டி வைத்துவிட்டார். தன்னை ஏன் காவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள் என்பது தெரியாமல், திகைத்து நின்றார் அந்த சிறுவன்.
அவரிடம் ஹெல்மெட் போடவில்லை என்பதற்காக காவல்துறையினர் அபராதம் செலுத்தச் சொன்னதாக கூறப்படுகிறது. என்ன செய்வது என தெரியாமல் குழம்பிப்போன மாணவர், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின்னர், 1 மணி நேரமாக காக்க வைத்த காவலர்கள், ஒரு வழியாக சைக்கிளையும், பள்ளி மாணவரையும் விடுவித்திருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், சிறுவன் இரண்டு கைகளையும் விட்டுவிட்டு சைக்களில் ஓட்டியதால், அவரை எச்சரிக்கும் வகையில் பிடித்து வைத்திருந்ததாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை