[X] Close

கோயில் கொடையில் ஆபாச டான்ஸ்: ஐகோர்ட் நிபந்தனை

temple-festivals---high-court-judgement

தமிழகத்தில் கோயில் விழாக்களில் ஆபாச நடனம், ஆபாச பாடல்கள், ஆபாச வசனங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை விதித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி, காவல்துறையிடம் விழாக்குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது. போலீஸார் பல்வேறு காரணங்களைக் கூறி அனுமதி மறுத்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆடல், பாடலுக்கு அனுமதி பெறப்படுகிறது.

இந்நிலையில், ’கட்சி, ஜாதி, மதம் சார்ந்த பாடல்கள், நடனங்கள் இடம்பெறக் கூடாது. அரசியல் கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்களை ஆதரித்து பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது. ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்கள் கட்டாயம் ஒழுங்கான ஆடைகள் அணிய வேண்டும். ஆபாச நடனம், ஆபாச பாடல்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்’ என்ற நிபந்தனைகளை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விதித்துள்ளது.


Advertisement
Related Tags : judgement high court festival temple

Advertisement

Advertisement
[X] Close