[X] Close

வைரவிழாவுக்கு வரமாட்டார் கருணாநிதி? ஸ்டாலின்

karunanithi-will-not-come-to-diamond-jubilee

வைர விழாவில் க‌ருணாநிதி பங்கேற்க வாய்ப்பில்லை என திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினராகி ஓராண்டு முடிந்ததையொட்டி கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை முக.ஸ்டாலின் இன்று வழங்கினார். ஏற்கனவே தொகுதியை ஆய்வு செய்தபோது அளிக்கப்பட்டிருந்த கோரிக்கை மனுக்களை பரிசீலித்து படிப்படியா‌கப் பிரச்னைகளை சரிசெய்து வருவதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். அந்த வகையில், இன்று கொளத்தூர் தொகுதியில் மருத்துவ முகாம்கள் அமைத்தும், பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கியதாகத் தெரிவித்தார். வைர விழாவில் கருணாநிதி பங்கேற்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், மருத்துவர்கள் அனுமதி தந்தால் மட்டுமே கலந்துகொள்ள இயலும் என்று கூறினார்.


Advertisement

Advertisement
[X] Close