[X] Close

பகலில் வெயில்.. மாலையில் கனமழை - சட்டென மாறிய சென்னை வானிலை

Heavy-Rain-Fallen-in-Chennai-at-Evening

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. 

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்திருந்த நிலையில் நேற்றுமுன்தினம் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்தது. அதேபோல் இன்றும் பகலில் வெயிலால் வெப்பம் வாட்டிய நிலையில் மாலை நேரத்தில் கிண்டி, அடையாறு, திருவல்லிக்கேணி, திருவான்மியூர், மீனம்பாக்கம், மாதவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது. 

இதேபோல் கோயம்பேடு, அசோக்நகர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. ஒரு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. ப‌ல இடங்களில் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக தரமணியில் 46 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close