உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களின் கோரிக்கைகளை, தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தகுதிக்கேற்ற ஊதியம், பட்டமேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் மருத்துவர்களுடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவக் கல்வி இயக்குநர், சுகாதார இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களின் கோரிக்கைகளை, தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்களின் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியமே, மருத்துவர்களை போராடும் நிலைக்குத் தள்ளியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக வேதனை தெரிவித்துள்ள ஸ்டாலின், அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய மருத்துவப் பணியின் முக்கியத்துவத்தை கருதி, அரசு மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமென மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்