[X] Close

மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு

Rain-may-hit-tamilnadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Advertisement

தென்மேற்கு திசையில் இருந்து வங்கக்கடலில் 45 லிருந்து 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சின்ன கல்லாரில் 3செ.மீ, வால்பாறை, தாம்பரம், தேவாலாவில் 2 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close