Published : 22,Aug 2019 08:50 AM

அமெரிக்கா செல்லும் முதலமைச்சர்: பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என தகவல்

TamilNadu-Cm-palanisamy-Travel-Plan-to-America

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்லும் நிலையில் அவரது பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல்வரின் இந்த பயணத்தின் போது அவரது பொறுப்புகளை வேறு மூத்த அமைச்சர்களிடம் அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில் அவரது பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமான முடிவுகளை முதல்வர் எங்கிருக்கிறாரோ அங்கிருந்து கையெழுத்திட்டு FAX மூலம் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து விடுவார் என மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு 1968ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது அவரது இலாக்காக்களின் பொறுப்பு 4 அமைச்சர்களிடம் அளிக்கப்பட்டது. 

1970ஆம் ஆண்டு கருணாநிதி ஐரோப்பாவிற்கு சென்ற போது பொறுப்புகளை மற்ற அமைச்சர்களிடம் ஒப்படைத்தார்.1978ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற போதும், சில பொறுப்புகள் அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்