துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் இறுதி சடங்கில் அறிமுகம் இல்லாதவர்கள் 700க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 4ம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், எல் பஸோ (EL PASO) என்ற இடத்தில் உள்ள வால்மார்ட் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்கள் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். அப்போது, பணியில் இருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்
இந்த தாக்குதலில் தன் மனைவியை இழந்த பாஸ்கோ என்பவரை அறிமுகமே இல்லாத 700க்கும் மேற்பட்டவர்கள் நேரில் சந்தித்து அரவணைத்து ஆறுதல் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
63 வயதான மார்ஜி என்ற தன் மனைவியை துப்பாக்கிச் சூட்டில் இழந்தார் பாஸ்கோ. தனக்கு உறவினர்கள் அதிகம் இல்லை என்றும், மனைவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கக்கூட ஆட்கள் இருக்கமாட்டார்கள் என்றும் அவர் மனம் வருந்தியுள்ளார். இந்த தகவலை இறுதிச்சடங்கு நடத்தும் அமைப்பு தங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது. இதனை அடுத்து பாஸ்கோ மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க 700க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். வரிசையில் நின்று பாஸ்கோவை சந்தித்த ஒவ்வொருவரும் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினர்.
இது குறித்து பேசிய மார்ஜியின் பேரன், ஒவ்வொருவரும் அறிமுகம் இல்லாதவர்கள், வெவ்வேறு இடத்தில் இருந்து வந்து ஆறுதல் கூறினார்கள். மக்களின் அன்பை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்
Loading More post
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
நடுவானில் பிரசவ வலி: பணிப்பெண் உதவியால் பிறந்த குழந்தைக்கு புதுவிதமான பெயரிட்ட தாய்
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்