[X] Close

‘கர்நாடக வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவை’ - பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்

Karnataka-floods--Yediyurappa-meets-PM-Modi--seeks-Rs-10-000-crore-relief

கர்நாடகாவில் கன மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என பிரதமர் மோடியிடம் அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா நேரில் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி சென்ற கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச்  சந்திப்பில் கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பலரும் உடன் இருந்தனர். அப்போது, கர்நாடகாவில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் எடியூரப்பா வழங்கினார். அதில், மழை, வெள்ள பாதிப்புக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், “மழை, வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசின் நிதி விரைவில் வழங்கப்படும் என முதல்வர் எடியூரப்பாவிடம் பிரதமர் உறுதி அளித்துள்ளார். 40 நிமிடம் நடைபெற்ற சந்திப்பில் கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்” என்றார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close