Published : 14,Aug 2019 05:05 PM

பாரதிராஜாவுக்கும், எனக்கும் கருத்துக்கள் மாறுபடலாம்; நட்பு மாறாது - ரஜினி பேச்சு

Rajinikanth-talked-about-director-bharathiraja-friendship

தனிமையில் சந்திக்கும் போது இயக்குநர் பாரதிராஜா தன்னை தலைவர் என அழைப்பார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னையில் கதாசிரியர் கலைஞானத்திற்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், கதாசிரியர் கலைஞானத்திற்கு ரஜினி தங்கச்சங்கிலி அணிவித்து ஆசிர்வாதம் பெற்றார். 

விழாவில் பேசிய ரஜினி, “பாரதிராஜாவுக்கும், எனக்கும் கருத்துக்கள் எண்ணங்கள் மாறுபடலாம்; ஆனால் நட்பு மாறாது. ‘உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என பாரதிராஜா அடிக்கடி கூறுவார். எவ்வளவு பணம், புகழ் சம்பாதித்தாலும் பழைய நண்பர்கள் முக்கியம்.

                    

தமிழ் சினிமாவில் கதாசிரியர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். இயக்குநர், தயாரிப்பாளருக்கு அடுத்து கதாசிரியர்களின் பெயரை முன்னிலைப்படுத்தி போட வேண்டும். படத்திற்கு அஸ்திவாரமே கதாசிரியர்கள்தான், ஆனால் அவர்களுக்கு உரிய ஊதியம் கிடைக்காதது சாபம். 

கலைஞானம் பற்றி தெரியாத தயாரிப்பாளர்களோ, இயக்குநர்களோ இருக்க முடியாது. கதையில் சிக்கல் ஏற்பட்டால் உடனே கலைஞானத்தை தான் அழைப்பார்கள். கலைஞானம் கதை சொல்லும் விதமே வித்தியாசமானது. 

ஹீரோவாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை; பைக், வீடு என சந்தோஷமாக இருக்க நினைத்தேன். பைரவி படத்தில் என்னை ஹீரோவாக நடிக்க அழைத்தபோது அதிர்ச்சி அடைந்தேன். வில்லனாக நடித்துக் கொண்டிருந்த போது திடீரென ஹீரோவாக நடிக்க அழைத்ததால் அதிர்ச்சி அடைந்தேன். பைரவி படத்தில்தான் எனக்கு முதன்முதலில் கிரேட் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது” என்று பேசினார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்