[X] Close

புடிச்சு உள்ள போடுங்க சார்: போதை கணவன் மீது மனைவி புகார்!

Wife-protests-against-drunkard-husband

மது அருந்திவிட்டு அடித்து துன்புறுத்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸாரைக் கண்டித்து பெண் ஒருவர் தனது 10 வயது மகளுடன் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் ராமனூரைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. நிதி நிறுவனம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார். இவர் மனைவி கல்பனா. இவர்களுக்கு 10 வயதில் பூஜா என்ற மகள் உள்ளார். கணேசமூர்த்திக்கு மது பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது. போதையில் கல்பனாவை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.


Advertisement

இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்னர், கணேசமூர்த்தி மீண்டும் கல்பனாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால், கல்பனா தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்களால் உயிர் பிழைத்துள்ளார்.

இதுதொடர்பாக, கல்பனா பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் கணேசமூர்த்தி நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தனது மகள் பூஜாவுடன் கணவர் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸாரைக் கண்டித்து பசுபதிபாளையம் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர், போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, கல்பனா தர்ணாவை கைவிட்டார்.


Advertisement

Advertisement
[X] Close