வேலூர் மக்களவைத் தொகுதியை கைப்பற்றப் போவது யார் ? - இன்று வாக்கு எண்ணிக்கை

வேலூர் மக்களவைத் தொகுதியை கைப்பற்றப் போவது யார் ? - இன்று வாக்கு எண்ணிக்கை
வேலூர் மக்களவைத் தொகுதியை கைப்பற்றப் போவது யார் ? - இன்று வாக்கு எண்ணிக்கை

வேலூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் சிறப்புக் காவல்படையினரும், மூன்றாம் அடுக்கில் தமிழக காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இவர்கள் தவிர மேலும் 500 காவல்துறையினர் இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். ‌வாக்கு எண்ணும் மையத்தில் 72 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. முன்னதாக காலை 7 மணிக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல் உடைக்கப்பட்டு அவை வாக்கு எண்ணும் இடத்திற்கு எடுத்துவரப்படும். 

6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 6 அறைகளில் எண்ணப்‌படுகின்றன. இதற்காக ஒவ்வொரு அறையிலும் தலா 14 மேசைகள் போடப்பட்டுள்ளன. வாக்குகள் 22 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. மழைவர வாய்ப்புள்ளதால் வாக்கு எண்ணும் மையத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com