[X] Close

விவேகம் டீசர் லீக் ஆக நான் காரணமா?

antony-ruben

விவேகம் படத்தின் டீசர் லீக் ஆன தான் காரணம் இல்லை என்று அந்தப் படத்தின் எடிட்டர் ஆண்டனி ரூபன் தெரிவித்துள்ளார்.


Advertisement

அஜீத், காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன், இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடிக்கும் படம், ’விவேகம்’. சிறுத்தை சிவா இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே, இணையத்தில் லீக் ஆனது இதன் டீசர்.
இதுபற்றி படத்தின் எடிட்டர் ஆண்டணி ரூபன் கூறும்போது, ‘இப்போதெல்லாம் அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலையே ஹேக் செய்துவிடுகிறார்கள். விவேகம் டீசர் லீக் ஆக நான் காரணமல்ல. அது சுமாரான தரத்தில் வெளியான டீசர். சவுண்ட் சரியாக இல்லை.இருந்தாலும் அது எப்படி வெளியானது என்பது பற்றி விசாரித்துவருகிறோம். இது ஒரு பக்கம் இருந்தாலும் அஜீத் டீசரை பார்த்துவிட்டு பாராட்டி எனக்கு மெசேஜ் அனுப்பினார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.


Advertisement
Related Tags : cinema vivegamvivegam

Advertisement

Advertisement
[X] Close