Published : 12,May 2017 03:45 PM
மூதாட்டியை காப்பாற்ற ரயிலை கவிழ்த்த மக்கள்

சீனாவில் குவாங்ஷு மாகாணத்தில் சுரங்க ரயில் சென்று கொண்டிருந்தது. ஒரு ரயில் நிலையத்தில் நின்றபோது ரயிலில் இருந்து இறங்கிய 72 வயது பெண் தவறி விழுந்து ரயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கி கொண்டார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
உடனே ரெயில் பயணிகள் விரைந்து சென்று ரெயில் புறப்படாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த பெண்ணை தூக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. எனவே ரயில் பயணிகள் அனைவரும் பெட்டிகளில் இருந்து கீழே இறங்கினர்.
பெண் சிக்கியிருந்த ரயில் பெட்டியை அனைவரும் ஒன்று சேர்ந்து பக்கவாட்டில் கீழே தள்ளி சாய்த்தனர். அந்த ரயில் பெட்டி சுமார் 100 டன் எடை கொண்டது. ஒரு வழியாக ரயில் பெட்டியை சாய்த்து சிக்கிக் கொண்ட பெண்ணை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
அது செல்போனில் வீடியோ ஆக எடுக்கப்பட்டு, சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. வீடியோவைப் பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.