[X] Close

சென்னை மாநகரப் பேருந்து மோதி 2 பெண்கள் உயிரிழப்பு

Bus-accident-in-chennai--2-women-dead

சென்னை நந்தனத்தில் மாநகரப் பேருந்து மோதி 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.


Advertisement

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அருகே சென்னை மாநகரப் பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இரண்டு பெண்கள் உயிழந்தனர். உயிரிழந்தவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த பாவனி, நாகலட்சுமி என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்த மற்றொரு பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

ஒரே பைக்கில் 3 பெண்கள் பயணித்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பைக்கில் சென்றபோது அவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக மாநகர பேருந்து ஓட்டுநர் குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close