Published : 11,May 2017 05:45 AM

பாக். மீண்டும் அட்டூழியம்: பெண் பலி

kashmiri-women-death

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

காஷ்மீரின் ரஜவ்ரி மாவட்டத்தின் நவ்ஷெராவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் படைகள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தின. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது கணவர் காயமடைந்தார். தொடர்ந்து அந்த பகுதியில் பாகிஸ்தான் படைகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. எல்லையில் சமீப காலமாக பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்