Published : 07,Jul 2019 07:17 AM

அம்மன் திருவிழா : தலையில் தேங்காய் உடைத்த பக்தர்கள்

Amman-Temple-Festival---The-devotees-broke-the-coconut-on-the-head

கிருஷ்ணகிரியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய்களை உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சப்படி கிராமத்தில் உள்ள பிளேக் மாரியம்மன் கோயிலில் 17ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. முன்னதாக பிளேக் மாரியம்மன், தொட்டம்மா, பங்காரம்மா ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை‌கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். சிலர் ரத்தம் வடிய தேங்காய்களை உடைத்துக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கிராம தேவதைகளான எல்லம்மா, மாரியம்மன், முத்துமாரியம்மன், முனிஸ்வரன், காளியம்மன், உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களை அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்