[X] Close

சேலத்தில் மர்மமான முறையில் இளைஞர் உயிரிழப்பு : அடித்துக்கொலை..!

A-Youngster-Murder-in-Salem-and-Police-inquiry-about-it

மேட்டூர் அருகே இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப‌டுத்தியுள்ளது‌.‌ 


Advertisement

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தேசாய் நகரில் வசித்து வந்த இளைஞர் ஹரிசிவா. இவர் நேற்று மாலை முடித்திருத்தம் செய்வதற்காக கடைக்கு சென்றுள்ளார். ஆனால் சலூன் கடைக்கு சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தனர். ஹரிசிவாவை எங்கும் காணவில்லை. 

இதையடுத்து அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள முட்புதரில் தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த மேட்டூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் கொலை செய்யப்பட்டிருப்பது ஹரிசிவா என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close