மேட்டுப்பாளையத்தில் பட்டியிலின சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த தனது தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்த அண்ணன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் அதே பகுதியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தச் சூழலில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வர்ஷினி பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி கனகராஜின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கனகராஜின் குடும்பத்தார் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் இவர்களின் காதலுக்கு கனகராஜின் அண்ணன் வினோத் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்தச் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன் வர்ஷினி பிரியா மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கனகராஜ் வீட்டிற்கு சென்று கூறியுள்ளார். ஆனால் கனகராஜ் குடும்பத்தினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் கனகராஜ் வர்ஷினி ப்ரியாவுடன் சேர்ந்து சீரங்கராயன் ஓடை பகுதியில் வாடகை வீட்டில் தனி குடும்பம் நடத்தினார். இதனால் ஆத்திரமடைந்த கனகராஜின் அண்ணன் வினோத் அவர்கள் இருக்கும் வீட்டிற்கு சென்று இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். அந்தக் கொடூரத் தாக்குதலில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வர்ஷினி ப்ரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை முடிந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் கோவை மாவட்ட எஸ்.பி சுஜித் குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்த பின்னர், வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர், 2 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக உள்ள கனகராஜின் அண்ணன் வினோத்தை தேடி வந்தனர். இந்த சம்பவம் மேட்டுப்பாளையம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வினோத்குமார் இன்று காலை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix