Published : 12,Jan 2017 08:52 AM
ஆந்திராவில் தமிழக முதலமைச்சருக்கு வரவேற்பு

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திரா சென்றடைந்தார். விஜயவாடாவில் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை ஆந்திர அமைச்சர் வரவேற்றார்.
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டது கிருஷ்ணா நதி நீர் திட்டமாகும். இதன்படி, கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு போதிய நீர் திறப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திரா சென்றுள்ளார். விஜயவாடா சென்றுள்ள தமிழக முதலமைச்சரை ஆந்திரா அமைச்சர் வரவேற்றார்.
தமிழக முதல்வர் ஒருவர் கிருஷ்ணா நதி நீர் விடுவிப்பது தொடர்பாக பேச ஆந்திரா சென்றுள்ளது இதுவே முதல்முறை ஆகும்.