குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று வரும் 24-ஆம் தேதி முதல் அரை நாள்தான் இயங்கும் என அறிவித்துள்ளது
தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மேன்சன்கள், ஹோட்டல்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, வரும் 24-ஆம் தேதி முதல் அரை நாள்தான் இயங்கும் என அறிவித்துள்ளது.
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுத்திருப்பதாக அப்பள்ளி பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளது. பள்ளிக் குழந்தைகளின் கழிவறைகளை பராமரிக்க தண்ணீர் இல்லாத சூழலில் இத்தகைய முடிவை எடுக்க வேண்டி உள்ளதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல தனியார் பள்ளிகள், தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றன.
முன்னதாக கிழக்கு தாம்பரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நேற்றும், இன்றும் பள்ளிக்கு விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!