[X] Close

மலேசியாவில் துவங்குகிறது சிம்புவின் ‘மாநாடு’

Simbu-s-Maanadu-to-go-on-floors-from-25th-June

சிம்பு நடிக்கும் ’மாநாடு’ படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் வரும் 25 ஆம் முதல் தொடங்குகிறது.

’அமைதிப்படை-2’, ’கங்காரு’ படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. இவர் தனது, வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தை இப்போது தயாரித்துள்ளார். இந்தப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் ’மாநாடு’ என்ற படத்தை அவர் தயாரிக்கிறார்.  இதில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி  நடிக்கிறார். இவர் தெலுங்கில் ஹலோ, சித்ரலாஹிரி படங்களில் நடித்துள்ளார். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ’ஹீரோ’, மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும், ’மரக்கார்: அரபிகடலண்டே சிம்ஹம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெறுகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


Advertisement

(கல்யாணி பிரியதர்ஷன்)

அதிரடி அரசியல் கதையை கொண்ட இந்த படம், அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆனதால் கைவிடப்பட்டது என்று செய்தி வெளியானது. இந் நிலையில், வரும் 25ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் ’மாநாடு’ படத்தின் ஷூட்டிங் துவங்க இருக்கிறது. 


Advertisement

(வெங்கட் பிரபு, சிம்பு, சுரேஷ் காமாட்சி)

படத்தின் முன் தயாரிப்பு வேலைகளுக்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டோம் என்றும் அதனால் படம் கைவிடப்பட்டதாக தவறான தகவல் பரவிவிட்டது என்றும் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close