Published : 22,May 2019 01:59 PM

“நாளை வன்முறை வெடிக்கலாம்” - உள்துறை எச்சரிக்கை 

central-home-ministry-warning-state-government

நாளை வாக்கு எண்ணிக்கையின் போது சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் தடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சூழலில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பாக மாநில உள்துறை செயலாளர்கள், டிஜிபிக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. 

அதில், நாளை பல்வேறு இடங்களில் வன்முறை வெடிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்தந்த மாநிலங்களில் பொது அமைதியை பாதுகாக்க அத்தனை நடவடிக்கையையும் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறக்கூடிய இடங்கள், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்க கூடிய அறைகள் ஆகியவற்றிற்கு கூடுதலான பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இன்றைய தினம் ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கக்கூடிய தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து விளக்கம் அளித்தனர். அந்த வகையில் சத்யபிரதா சஹூ கூட தமிழகத்தில் ராணுவத்தினர், காவல்துறையினர் எந்த அளவுக்கு குவிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை குறிப்பிட்டிருக்கிறார். 


 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்