[X] Close

செய்வோம்ல: தொப்பையை குறைக்க குரங்குக்கு டயட்!

fat-uncle-undergoes-diet

தொப்பையை குறைக்க, ஏகப்பட்ட எடை குறைப்பு வழிகளை நம் ஆட்கள் செய்துகொண்டிருக்க, குரங்கு ஒன்றின் தொப்பையைக் குறைக்க, படாதபாடு பட்டுவருகிறது தாய்லாந்து.


Advertisement

பாங்காக்கில் உள்ள புளோட்டிங் மார்க்கெட் என மிதக்கும் சந்தை அருகே குண்டு குரங்கு ஒன்று அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தது. இது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தக் குரங்கு பற்றி தாய்லாந்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் இந்தக் குண்டு குரங்கைப் பார்த்தனர். அநியாயத்துக்கு குண்டா இருக்கே என்று நினைத்த அவர்கள், மயக்க மருந்து கொடுத்து அதை நாஹோன் நயோக் மாகாணத்தில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு மையத்துக்குத் தூக்கிக் கொண்டு சென்றனர். அங்கு அதன் எடையை பரிசோதித்தால், 15 கிலோவாக இருந்தது. சாதாரணமாக குரங்கின் எடை, 8 கிலோவில் இருந்து 10 கிலோவுக்குள்தான் இருக்குமாம்.

மிதக்கும் சந்தைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் தின்றது போக, மிச்ச உணவுகளை குரங்குக்குக் கொடுக்க, அதை தின்று இப்படி குண்டாகி இருக்கிறது இந்த குரங்கு. இதற்கு குண்டு அங்கிள் என்ற பெயர் வைத்து, ஏகப்பட்ட பயிற்சிகளை அளித்துவருகின்றனர் வனவிலங்கு அதிகாரிகள்.


Advertisement

கண்டதை சாப்பிட விடாமல், டயட்டை பின்பற்றச் சொல்லி, தினமும் மற்றக் குரங்களை சுற்றி ஓட வைத்து சுளுக்கெடுக்கிறார்கள், இந்த குண்டு அங்கிளுக்கு. முதலில் அடம்பிடித்த அங்கிள், இப்போது பயிற்சியை சிரமேற்கொண்டு செய்துவருகிறதாம்.

Related Tags : fat monkeyfat monkey

Advertisement

Advertisement
[X] Close