ஜனநாயக கடைமையாற்றும் வாக்காளர்களை மகிழ்விக்க டீ, காபி மற்றும் ஏசி வசதியுடன் இந்தூரில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மக்கள் வரவேற்பை பெற்றது.
நாடு முழுவதும் இன்று 7ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் உத்தரப்பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், சண்டிகர், பஞ்சாப், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி 60.20% சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையே வாக்களிக்கும் மக்களை மகிழ்விக்கும் நோக்கில் மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் இந்தூரில் ஏசி வசதியுடன் கூடிய வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அத்துடன் அங்கு குடிநீர் வசதி, டீ, காபி, பாதம் பால், பிஸ்கட் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படும் வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும் ரத்தக்கொதிப்பு பரிசோதனை, உடலில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வசதிகளை கண்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து சென்றனர். அத்துடன் இதுபோன்ற வசதிகளை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஏற்படுத்தினால், கட்டாயம் வாக்குப்பதிவு சதவிகிதம் உயரும் என்றும் தெரிவித்தனர்.
Loading More post
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!