[X] Close

உலகக் கோப்பைக்கான பாடலை வெளியிட்டது ஐசிசி!

ICC-releases-official-World-Cup-2019-song

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக பாடல் ஒன்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.


Advertisement

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 22 ஆம் தேதி இங்கிலாந்து செல்கிறது. அங்கு பயிற்சி ஆட்டத்தில் வரும் 24 ஆம் தேதி விளையாடுகிறது.

உலகக் கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில், தென்னாப்பிரிக்காவை ஜூன் 5 ஆம் தேதி சந்திக்கிறது இந்திய அணி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க உலகம் முழுவதும் இருந்து பல லட்சம் ரசிகர்கள் இங்கிலாந்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ’ஸ்டான்ட் பை’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த பாப் பாடகி லோரின் பாடியிருக்கிறார். உலகக் கோப்பை கிரிக்கெட் தூதர் பிளிண்ட் டாப், லாரின் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர்.

இந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close