[X] Close

பிரபல தெலுங்கு நடிகர் ரல்லப்பள்ளி காலமானார்

Veteran-Telugu-Actor-Rallapalli-Dies-At-74

பிரபல பழம்பெரும் நடிகர் ரல்லப்பள்ளி நரசிம்மா என்ற ரல்லப்பள்ளி வெங்கட நரசிம்ம ராவ் உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 74.


Advertisement

ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகர் ரல்லப்பள்ளி வெங்கட நரசிம்ம ராவ். தெலுங்கில் சுமார் 800-க்கும் மேற்பட்ட படங்களில், காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழில், மணிரத்னம் இயக்கிய பம்பாய், ராஜீவ்மேனன் இயக்கிய மின்சார கனவு உட்பட சில படங் களில் நடித்துள்ளார்.


Advertisement

ஐந்து முறை சிறந்த நடிகருக்கான ஆந்திர அரசின் மாநில விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த அவர், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 


Advertisement

Advertisement
[X] Close