அயர்லாந்தில் நடக்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றது.
அயர்லாந்து, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு, ஒருநாள் கிரிக்கெட் தொடர், அயர்லாந்தில் நடந்துவருகிறது. பங்களாதேஷ்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.
தொடக்க வீரர்களாக ஷாய் ஹோப், அம்ப்ரிஸ் களமிறங்கினர். அம்ப்ரிஸ் 23, பிராவோ 6, ரோஸ்டன் சேஸ் 19, ஜொனாதன் கார்ட்டர் 3 ரன்னில் பெவிலியன் திரும்ப, வெஸ்ட் இண்டீஸ் அணி 23.1 ஓவரில் 99 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது.
இந்நிலையில், ஷாய் ஹோப் - கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஜோடி சிறப்பாக விளையாடி 100 ரன் சேர்த்தது. ஷாய் ஹோப், 108 பந்தில் 6 பவுண் டரி, 1 சிக்சருடன் 87 ரன்னும் ஹோல்டர் 76 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 62 ரன்னும் விளாசினர். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்தது. பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபிசூர் ரகுமான் 4, மோர்டசா 3, மிராஸ், ஷகிப் ஹசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 248 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி, 47.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அந்த அணியின் சவும்யா சர்க்கார் 54 ரன்னும் முஷிபுஹூர் ரஹிம் 63 ரன்னும் முகமது மிதுன் 43 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் நர்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியை அடுத்து இறுதி போட்டியில் இந்த அணிகள் வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் மோத உள்ளன.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!