[X] Close

அமைதியாக நடந்து முடிந்த 6-ஆம் கட்ட தேர்தல்

6th-Stage-Voting-filed-by-Peace-fully-in-India

7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற 6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.


Advertisement

மக்களவைத் தேர்தலுக்கான 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மாலை 7 மணி நிலவரப்படி 7 மாநிலங்களிலும் சராசரியாக 61.14% வாக்குகள் பதிவாகியிருந்தன. மேற்கு வங்காளத்தில் அதிகபட்சமாக 80.16% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஜார்க்கண்டில் 64.46%, மத்திய பிரதேசத்தில் 60.40%, ஹரியானாவில் 62.91%, உத்தரப்பிரதேசத்தில் குறைந்தபட்சமாக 53.37% வாக்குகள் பதிவாகியிருந்தன. பீகாரில் 59.29 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தலைநகர் டெல்லியில் 56.11% வாக்குகள் பதிவாகியுள்ளன. 


Advertisement

முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ‌மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வாக்களித்தனர். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சில வன்முறை சம்பவங்களை தவிர வாக்குப்பதிவு, பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்றதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Advertisement

Advertisement
[X] Close