‘அயோக்யா’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவிடப்படுவது அயோக்கித்தனம் என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘அயோக்யா’. இன்று திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் முதல் காட்சியை காண ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ‘அயோக்யா’ படம் வெளியாவது தள்ளி போடப்பட்டுள்ளதாக பி.ஆர்.ஓ ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஷால், ‘அயோக்யா’ ரிலீசுக்காக அனைத்து முயற்சிகளும் எடுத்துவிட்டேன், ஆனால் முடியவில்லை, எனக்கென ஒரு நாள் வரும், அதுவரை என் பயணத்தை தொடர்வேன் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘அயோக்யா’ திரைப்படம் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். முன்பதிவு செய்யப்பட்ட பணம், அவரவர் வங்கி கணக்கில் திருப்பி அனுப்பப்படும் எனத் திரையரங்கு தரப்பில் தெரிவித்துள்ளனர்.
வெளியீடு கடைசி நிமிட
இடையூறுகளால் தள்ளிவிடப்படுவது,
'அயோக்கிய'த்தனம்!
தயாரிப்பாளர் மற்றும் நாயகருக்கு உண்டான மன உளச்சலுக்கு
அளவே இருக்காது!
வெல்வர் விரைவில்— R.Parthiban (@rparthiepan) May 10, 2019
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் பார்த்திபன், கடைசி நிமிட இடையூறுகளால் அயோக்யா வெளியீடு தள்ளிவிடப்படுவது அயோக்கித்தனம் எனத் தெரிவித்துள்ளார். இதனால் தயாரிப்பாளர் மற்றும் நாயகருக்கு உண்டான மன உளைச்சலுக்கு அளவே இல்லை எனக் குறிப்பிட்டுள்ள பார்த்திபன், வெல்வர் விரைவில் என்றும் தெரிவித்துள்ளார்.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?