[X] Close

சிஎஸ்கே தோல்வி : பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி

IPL-55-League--Punjab-Beat-CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதல் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. சென்னை அணியில், டூ பிளசிஸ் மற்றும் ரெய்னா அதிரடியாக ரன்களை உயர்த்தினர். 53 (38) ரன்கள் எடுத்த நிலையில் ரெய்னா அவுட் ஆனார். டூ பிளசிஸ் 55 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தபோது, விக்கெட்டை இழந்தார். பஞ்சாப் அணியில் சாம் குரன் 3 விக்கெட்டுகளையும், ஷமி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 


Advertisement

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் அதி வேகத்தில் 50 ரன்களை விளாசினார். மற்றொரு புறம் கிறிஸ் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்த பஞ்சாப் அணி எளிமையாக வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணியின் ஸ்கோர் 108 ரன்கள் என்ற நிலையில், ராகுல் 71 (36), கெய்ல் 28 (28) ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து தூக்கினார் ஹர்பஜன் சிங். அதைத்தொடர்ந்து 7 (6) ரன்கள் மட்டுமே எடுத்து மயாங் அகர்வாலும் வெளியேற பஞ்சாபின் வெற்றி சற்று தள்ளிப்போனது. ஆனால் அடுத்த வந்த பூரான் நிலைத்து விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இறுதி நேரத்தில் பூரான் 36 (22) ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். 18 ஓவர்கள் முடிவில் 173 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னையில் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


Advertisement

Advertisement
[X] Close