Published : 29,Apr 2017 05:12 AM

முதல் நாளில் ரூ.100 கோடி: பாகுபலி 2 சாதனை

bahubali-blasts

பாகுபலி-2 திரைப்படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் இதுவரை வெளியான திரைப்படங்களிலேயே, முதல் நாளில் 100 கோடி ரூபாய் வசூலைக் குவித்த முதல் திரைப்படம் பாகுபலி-2தான். அனைத்து திரையரங்குகளிலுமே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. திரைப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதால், பாகுபலி-2 திரைப்படம் வசூலில் மேலும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், இணையதளங்களில் சட்டவிரோதமாக பாகுபலி-2 திரைப்படம் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியான சில நிமிடங்களிலேயே, இணையதளத்திலும் சட்டவிரோதமாக பாகுபலி 2 திரைப்படம் முழுவதும் வெளியானது. படத்திற்கு இரு நாட்கள் முன்னதாக சில நிமிட காட்சிகளும், அதற்கு அடுத்த நாள் 30 நிமிடக் காட்சிகளும் வெளியான நிலையில், இப்போது முழுப் படமும் இணையத்தில் வெளியாகியிருப்பது, பாகுபலி படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

2 நிமிடம் 40 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த படத்தை, குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தமிழில் ஓடும் பாகுபலி படத்தில், சப் டைட்டில் பிரெஞ்சு மொழியில் இருக்கிறது. அதனால், பிரான்ஸ் நாட்டில் படம் திரையிடப்பட்டபோது, அங்கிருந்து திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்